சனிக் கிரகத்தின் டைட்டன் நிலவினை நோக்கி இராட்சத ட்ரோன் விமானத்தை அனுப்பும் நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

நாசா நிறுவனமானது அடுத்த திட்டமாக சனிக் கிரகத்தின் நிலவுகளுள் ஒன்றான டைட்டனிற்கு இராட்சத ட்ரோன் விமானத்தை அனுப்பி வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பானது கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

பனி படர்ந்த நிலவாக காணப்படும் டைட்டன் உயிரினங்கள் வாழ ஏதுவான சூழ்நிலைகளைக் கொண்டுள்ளதா என்பதை அறியவே Dragonfly எனும் இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் அடிப்படையில் சுமார் 2.7 வருடங்கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், 108 மைல்கள் தூரத்திற்கு டைட்டனின் மேற்பரப்பில் குறித்த இராட்சத ட்ரோன் விமானம் நகர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்