நிலவினை வலம் வரும் சந்திரயான் 2 சுற்றுவட்டப் பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இந்தியாவிலிருந்து கடந்த மாதம் நிலவினை நோக்கிய ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலமானது சில தினங்களுக்கு முன்னர் பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

இந்நிலையில் நிலவினை சுற்றி வரும் சந்திரயான் 2 விண்கலத்தின் பாதையில் நேற்று முன்தினம் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது இரண்டாம் கட்ட மாற்றமாக சுற்றுவட்டத்தின் அளவில் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப் பாதை மாற்றத்தினை மேற்கொள்வதற்கு 1228 செக்கன்கள் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது நிலவின் மேற்பரப்பில் இருந்து அண்மையாக 118 கிலோ மீற்றர்களிலும், சேய்மையாக 4412 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலும் சந்திரயான் 2 வலம் வந்துகொண்டிருக்கின்றது.

அடுத்த கட்ட சுற்றுவட்டப் பாதை மாற்றங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி மற்றும் செப்டெம்பர் 4 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.

பின்னர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி இந்திய நேரம் 01.40 மணியளவில் சந்திரயான் 2 நிலவின் தரையிறங்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்