10 வருடங்களுக்கு முன்னரே ஒருவரின் மரணத்தை கண்டறியலாம்: புதிய இரத்த பரிசோதனை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஒருவர் இயற்கை மரணம் அடையக்கூடிய ஆபத்தில் இருக்கின்றாரா என்பதை இறப்பிற்கு 10 வருடங்கள் முன்னாடியே கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக விசேட இரத்தப் பரிசோதனை ஒன்றினை அறிமுகம் செய்துள்ளனர்.

ஆய்வின்போது இரத்தத்தில் 14 பயோமேக்கர்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பயோமேக்கர்கள் அனைத்து வகையான இயற்கை இறப்புக்களுடனும் தொடர்புபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்தில் உள்ள Leiden பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை விஞ்ஞானிகளே இந்த அபார கண்டுபிடிப்பினை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த ஆய்விற்காக 18 வயதிற்கும் 109 வயதிற்கும் இடைப்பட்ட 44,168 நபர்களின் இரத்த மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்