மிகவும் சிறிய மண்டையோட்டை கொண்டு மூளையின் பரிணாம வளர்ச்சியை அறிய முயற்சி

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இன்றைய மனித மூளையானது பல அற்புதமான கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி வருகின்றது.

எனினும் இந்த மூளையானது எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை அறிய விஞ்ஞானிகள் பல வருடங்களாக முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது 20 மில்லியன் வருடங்கள் பழமை வாய்ந்த மிகச்சிறிய மண்டை ஓட்டினை அடிப்படையாகக் கொண்ட இதற்கான ஆய்வினை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த மண்டையோடானது Chilecebus carrascoensis இனத்தைச் சேர்ந்த ஒரு குரங்கினுடையதாகும்.

இக் குரங்கானது iPad ஒன்றின் நிறையை விடவும் குறைவான எடையுடைது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மண்டையோடானது 1990 ஆம் ஆண்டு சிலியில் உள்ள அன்டீஸ் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்