அமேஷான் காட்டிலிருந்து வெளியேறிய காபன் மொனோ ஒக்சைட்: அதிர்ச்சி படத்தை வெளியிட்டது நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

கடந்த வாரம் அமேஷான் மழைக்காடுகளில் பயங்கரமான தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ள மரங்கள் எரிந்து நாசமாகியிருந்ததுடன் உயிரினங்களும் பாதிக்கப்பட்டன.

இத் தீப்பரவலின் போது அதிக அளவில் காபன் ஓர் ஓட்சைட் (Carbon Monoxide) வாயுவும் சூழலுக்கு விடுவிக்கப்பட்டிருந்தது.

சுமார் 5,500 மீற்றர்கள் உயரத்திற்கு பரவிய காபன் மொனோக்சைட் தொடர்பான அதிர்ச்சி காட்சியினை நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை Atmospheric Infrared Sounder (AIRS) மூலம் நாசா சேகரித்துள்ளது.

இதேவேளை உலகின் மிகப்பெரிய மழைக்காடு என அழைக்கப்படும் அமேஷானில் இந்த வருடம் ஏற்பட்ட தீவிபத்துடன் சேர்த்து சுமார் 72,843 தீவிபத்துக்கள் அங்கு ஏற்பட்டிருப்பதாக பிரேஸிலில் உள்ள National Institute for Space Research (INPE) அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்