முதன் முறையாக விண்வெளியில் சீமெந்து பயன்படுத்தி சோதனை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

விண்வெளியில் மனிதர்களை குடியேற்றுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது சாத்தியப்படும் சந்தர்ப்பத்தில் அங்கு வாழும் மனிதர்களுக்கு கதிர்ப்பு மற்றும் வெப்பநிலையில் இருந்து பாதுகாப்பினை வழங்குவதற்கு சீமெந்து பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் முதன் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே முதன் முறையாக சீமெந்து பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இப் பரிசோதனையை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த வானியலாளரான அலெக்ஷாண்டர் கேர்ஸ்ட் மேற்கொண்டுள்ளார்.

அதேபோன்று விண்வெளியில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தியும் பாதுகாப்பு முறைகளை உண்டாக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டுவருகின்றது.

உதாரணமாக நிலவில் காணப்படும் தூசிகளைக் கொண்டு பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள முடியுமா எனவும் பரிசீலிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு கிரகரங்களிலும் உள்ள ஈர்ப்பு சக்தியை கருத்தில்கொண்டே இம் முயற்சி மே்றகொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்