சனிக்கிரகத்தின் அட்டகாசமாக புகைப்படம் பிடித்தது ஹபிள் தொலைகாட்டி

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்கற்கள் போன்ற வான்பொருட்களை அவதானிப்பதற்காக நிறுவப்பட்டுள்ள ஹபிள் தொலைகாட்டியானது சனிக்கிரகத்தின் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அழகிய ஒளிவட்டத்தினைக் கொண்டிருக்கும் சனிக்கிரகத்தினை நேரிலே பார்ப்பது போன்ற உணர்வை இப் புகைப்படம் ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

பூமிக்கு நெருக்கமாக சனிக்கிரகம் வந்த போது இப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிரகம் பூமிக்கு அண்மையாக சென்றுள்ளது.

எனினும் இதன்போது பூமிக்கும் சனிக்கிரகத்திற்கும் இடையிலாள தூரம் 1.36 பில்லியன் கிலோமீற்றர்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சனிக்கிரகத்தின் சந்திரன்கள் அதனை சுற்றிவருவதைப் போன்ற Time Lapes வீடியோவினையும் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சனிக்கிரகத்திற்கு 60 இற்கும் மேற்பட்ட சந்திரன்கள் எனப்படும் துணைக்கோள்கள் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்