நிலவிற்கு செலுத்தப்படவுள்ள நாசாவின் இராட்சத ராக்கெட்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய்யமான நாசா எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் நிலவினை நோக்கி இராட்சத ராக்கெட் ஒன்றினை அனுப்பவுள்ளது.

இந்த ராக்கெட்டை வடிவமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது பிரதான பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ராக்கெட் ஆனது சுமார் 64 மீற்றர்கள் நீளமானதாகும்.

இதில் RS-25 ராக இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜினால் 9 மெகா தொன்கள் வரையான உந்து சக்தியை பிறப்பிக்க முடியும்.

மேலும் இந்த ராக்கெட் திட்டமானது 2024 ஆம் ஆண்டு நாசாவின் நிலவில் தரையிறங்குவதற்கான மற்றுமொரு திட்டத்திற்கு உந்துசக்தியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்