ஈஸ்ரோவின் விக்ரம் லேண்டர் பற்றி நாசா வெளியிட்ட தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ஈஸ்ரோ கடந்த ஜுலை மாதம் நிலவின் தென்துருவத்தை நோக்கிய சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பியமை தெரிந்ததே.

இம் முயற்சி 98 சதவீதம் வெற்றியளித்துள்ள போதிலும் இறுதியாக விக்ரம் லேண்டரினை மென்தரையிறக்கும் செய்வதில் ஈஸ்ரோ தோல்வியடைந்திருந்தது.

இதனை அடுத்து தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரை சந்திரயான் 2 விண்கலத்தின் ஓர்பிற்றரை கொண்டு தேடிவந்தது ஈஸ்ரோ.

லேண்டரை ஓர்பிற்றர் படம் பிடித்துள்ளது என ஈஸ்ரோ அறிவித்த போதிலும் இதுவரை அது தொடர்பான புகைப்படங்களை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா ஈஸ்ரோவுடன் இணைந்து விக்ரம் லேண்டரை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.

கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி தமது Lunar Reconnaissance Orbiter (LRO) உதவியுடன் இத் தேடலை நாசா ஆரம்பித்திருந்தது.

விக்ரம் லேண்டர் தரையிறக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்ட இடத்தினை சூழ சுமார் 600 கிலோ மீற்றர்கள் வரையிலான புகைப்படங்களையும் எடுத்திருந்தது.

எனினும் தற்போதுவரை விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்