அதிவிரைவாக உருகிவரும் அந்தாட்டிக் பனிக்கட்டிகள்: மற்றுமொரு அதிர்ச்சி தகவல் இதோ

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

பூகோள வெப்பமயமாதல் காரணமாக ஆர்டிக் மற்றும் அந்தாட்டிக் பகுதிகளில் உள்ள பனிப் படலங்கள் விரைவாக உருகிவருகின்றன.

இதனால் கடல் மட்டம் அதிகரிப்பதோடு பல நாடுகளின் கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயமும் காணப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த 50 வருட காலத்தில் அந்தாட்டிக் பகுதியில் மாத்திரம் சுமார் 315 பில்லியன் தொன் வரையிலான பனிக்கட்டிகள் உருகியுள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த மாதம் 25 ஆம் திகதி அளவில் சுமார் 1,636 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவு கொண்ட பாரிய பனிக்கட்டி ஒன்று உருகி கடலில் வீழ்ந்துள்ளது.

இப் பனிக்கட்டியானது அதே மாதம் 20 திகதியிலிருந்து உருக ஆரம்பித்திருந்த நிலையில் ஐந்தே நாட்களில் கடலில் விழுந்துள்ளது.

இதனை ஐரோப்பாவின் sentine-1 எனும் செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்