சலவை இயந்திரங்களில் ஆபத்தான பக்டீரியாக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

அதிகரித்துள்ள வேலைப்பளு காரணமாக அதிகமானவர்கள் இன்று சலவை இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் இவ் வகை இயந்திரங்களில் மாத்திரைகளுக்கு எதிர்ப்பு காட்டக்கூடிய பக்டீரியாக்கள் காணப்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் புதிதாக பிறந்த குழந்தைகளில் பரவிய மாத்திரை எதிர்ப்பு பக்டீரியாக்களுக்கும் சலவை இயந்திரப் பாவனைக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டமை குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.

எனினும் இது உண்மையில் வழக்கமான ஒரு நிகழ்வு இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனாலும் இது சலவை இயந்திரங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த வெப்பநிலையில் உள்ள நீரில் சலவை செய்யும்போது குறித்த பக்டீயாக்கள் அழிவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்