சனிக் கிரகத்திற்கு சொந்தமான புதிய 20 நிலவுகள் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

தன்னைச் சுற்றி அழகிய வளையத்தைக் கொண்ட சனி கிரகத்திற்கு சொந்தமான மேலும் 20 புதிய நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை கடந்த திங்கட்கிழமை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவற்றுடன் சனிக் கிரகத்திற்கு மொத்தமாக 82 நிலவுகள் காணப்படுகின்றன.

இதன்படி சூரியக் குடும்பத்தில் அதிக நிலவுகளைக் கொண்ட யூப்பிட்டர் கிரகத்தினை பின்னுக்கு தள்ளி சனிக்கிரகம் முதலிடம் பெற்றுள்ளது.

அதாவது யூப்பிட்டர் கிரகமானது 79 நிலவுகளைக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகின்றது.

மேலும் இந்த ஒவ்வொரு நிலவுகளும் ஏறத்தாழ 5 கிலோ மீற்றர்கள் விட்டம் கொண்டவையாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி 17 நிலவுகள் சனிக்கிரகத்தின் திசைக்கு எதிர்த்திசையில் சுற்றிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்