காபனீரொட்சைட்டை சேதனப் பதார்த்தமாக மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
27Shares

சமகாலத்தில் மனித செயற்பாடுகள் காரணமாக சூழலுக்கு வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது.

இதனால் பூகோள வெப்பநிலையிலும் பாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதனை தடுப்பதற்காக காபனீரொட்சைட்டினை வளிமண்டலத்தில் குறைப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாக காபனீரொட்சைட்டினை சேதனப்பதார்த்தமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதற்காக porous coordination polymer (PCP) எனும் சாதனத்தினை வடிவமைத்துள்ளனர்.

இச் சாதனமானது நாக உலோக அயன்களைக் கொண்டதாக காணப்படுகின்றது.

இதன் மூலம் சாதாரண அளவினை விடவும் 10 மடங்கு வினைத்திறனாக காபனீரொட்சைட்டு மூலக்கூறுகளை உறுஞ்ச முடியும்.

இவ்வாறு உறுஞ்சப்படும் காபனீரொட்சைட்டினை குறித்த சாதனம் பயனுள்ள சேதனப் பதார்த்தமாக வெற்றிகரமாக மாற்றுகின்றது என ஜப்பானின் கியோட்டா பல்கலைக்கழக இரசாயனவியலாளரான Ken-ichi Otake தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்