நாசா விண்வெளி ஆய்வு மையமானது 1970 ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிவினை நோக்கி விண்வெளி ஓடம் ஒன்றினை அனுப்பியிருந்தது.
இத் திட்டமானது Apollo 17 மிஷன் என அழைக்கப்படுகின்றது.
இதன்போது நிலவின் மேற்பரப்பில் உள்ள ஒரு படையிலிருந்து சிறிதளவு மாதிரியை டியூப் ஒன்றில் சேகரித்திருந்தது.
Gene Cernan மற்றும் Jack Schmitt ஆகியோரே இம் மாதிரிசை சேகரித்து பூமிக்கு கொண்டுவந்திருந்தனர்.

4 சென்ரி மீற்றர் அளவிலான குறித்த மாதிரி சேரிக்கப்பட்ட டியூப் ஆனது சுமார் 40 வருடங்கள் கழித்து கடந்த 5 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது.
குறித்த மாதிரியை ஆய்வு செய்வதற்காகவே இவ்வாறு முதன் முறையாக நாசா விஞ்ஞானிகள் அடைக்கப்பட்டிருந்த குறித்த டியூப்பினை திறந்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மீண்டும் நிலவிற்கான பயணம் ஒன்றினை மேற்கொள்வதற்கான திட்டத்தினை நாசா விண்வெளி ஆய்வு மையம் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
