கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தினை எலிகளில் பரீட்சிக்கும் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

சீனாவில் ஆரம்பித்து உலகின் இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் தொடர்ந்தும் மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் இவ் வைரஸினை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படியிருக்கையில் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று உலகெங்கிலும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை கொன்றுள்ள கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

இந்த தடுப்பு மருந்தினை தற்போது எலிகளில் பரீட்சித்து அதன் விளைவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

லண்டனில் உள்ள இம்பீரியல் காலேஜ் ஆராய்ச்சியாளர்களே இதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers