மாலை நேரங்களில் வைத்தியசாலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்: ஏன் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு செல்லும்போது மாலை நேரங்களை பொதுவாக தவிர்க்க வேண்டும் என ஆய்வு ஒன்று சொல்கின்றது.

இதற்கான சில காரணங்களும் குறித்த ஆய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது மாலை நேரத்திற்கு முன்னர் பொதுவாக தாதியர்கள், வைத்தியர்கள் உட்பட நோயாளிகளும் மதிய உணவை எடுத்திருப்பார்கள்.

இதனால் அனைவரினதும் செயற்பாடுகளில் மாற்றங்கள் காணப்படும்.

உதாரணமாக தூக்கம் மற்றும் சோம்பல் தன்மை காணப்படும்.

இது சிகிச்சைக்கு பெரிதும் இடையூறாக இருக்கும் என Duke பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி மாலை நேரங்களில் வைத்தியசாலை பணியாளர்களின் பணிமாற்றங்கள் (Shipf Changes) இடம்பெறும்.

இதனால் அனைத்து பணிகளும் வழமைக்கு திரும்ப சிறிது தாமதம் ஏற்படலாம்.

தவிர பணியை விட்டு செல்பவர்கள் அவசர அவசரமாக தமது பணிகளை முடித்துச் செல்ல எத்தனிப்பார்கள். இது அசௌகரியத்தினை ஏற்படுத்தும்.

மூன்றாவதாக மாலை நேரங்களில் சுத்தம் குறைவாக காணப்படுதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

காலை நேரங்களை விடவும் 38 சதவீதம் சுத்தம் குறைவாகவே வைத்தியசாலைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே காலை நேரங்களில் சிகிச்சைகளுக்காகவோ அல்லது பரிசோதனைகளுக்காகவோ வைத்தியசாலைக்கு செல்வது சிறந்தது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்