புத்தம் புதிய செயற்கைக்கோளினை விண்ணிற்கு அனுப்புகின்றது இஸ்ரோ

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

இந்திய விண்வெளி ஆய்வு மையமானது பூமியை படம் பிடிக்கக்கூடிய புதிய செயற்கைக் கோள் ஒன்றினை விண்ணில் ஏவவுள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஆனது எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GISAT-1 என அழைக்கப்படும் குறித்த செயற்கைக்கோள் இந்திய நேரப்படி காலை 5.43 மணியளவில் ஸ்ரீகரிக்கோட்டாவில் இருந்து விண்ணை நோக்கிய பயணிக்கவுள்ளது.

இதன் எடையானது 2,275 கிலோ கிராம்களாக காணப்படுவதுடன், சுமார் 4 மீற்றர்கள் விட்டம் உடையதாகவும் இருக்கின்றது.

இச் செயற்கைக்கோளில் நிகழ்நிலை (Real Time) கண்காணிப்பு வசதி காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

மேலும் குறித்த செயற்கைக்கோளினை GSLV-F10 ரொக்கெட் சுமந்து செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்