மிகப்பெரிய பிரச்சினையாக மாறும் செல்போன்கள்: வெளியானது புதிய ஆய்வு முடிவு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
395Shares

ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துபவர்கள் இரவு நேரத்தில் தூக்கத்திற்கு செல்வதற்கு முன்னர் பயன்படுத்துவது ஆபத்தானது என ஏற்கனவே ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்பட்டு வந்தது.

எனினும் இவ்வாறு தூக்கத்திற்கு முன்னர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவது தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் தற்போதைய ஆய்வு முடிவு ஒன்று மேலும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது இந்தியாவில் உள்ளவர்களின் முறையான தூக்கத்தை கெடுப்பதில் ஸ்மார்ட் கைப்பேசிகள் பிரதான காரணமாக விளங்குகின்றன எனவும், 92 சதவீதமான இந்தியவர்கள் தூக்கத்திற்கு முன்னர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் எனவும் இவ் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களை விடவும் தற்போது இரண்டு மடங்கு அதிகமான நேரம் இரவு நேரங்களில் ஸ்மார்ட் கைப்பேசிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தகவலை Wakefit.co வெளியிட்டுள்ளது. குறித்த ஆய்விற்காக சுமார் 50,000 இந்தியர்களின் தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்