11,600 வருடங்களுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை வால் நட்சத்திரம்! கண்ணாடி ஏதுமின்றி வெறும் கண்களால் பார்க்கலாம்

Report Print Kavitha in விஞ்ஞானம்

11,600 வருடங்களுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் பச்சை வால் நட்சத்திரத்திரம் நுழைய போவதாக ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பச்சை நட்சத்திரம் மே 13 ஆம் திகதி பூமிக்கு அருகில் பயணிக்கத் தொடங்கியதாகவும் வருகிற மே 27 ஆம் தேதி சூரியனை நோக்கி செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆஸ்திரேலியாவின் தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி பயணிக்கும் எனவும் சூரிய குடும்பத்தை கடப்பதற்கு முன்பாக இந்த நட்சத்திரம் சூரிய ஒளியில் பிரதிபலிக்கும் என கூறியுள்ளனர்.

பனி மற்றும் தூசுக்களாலான இந்த வால் நட்சத்திரமானது ஸ்வான் என்று அழைக்கப்படுகின்றது. இந்த நட்சத்திரத்தின் வால் மட்டும் 77 லட்சம் கிமீ நீளம் கொண்டுள்ளது.

இது பூமியில் இருந்து சுமார் 5.3 கோடி மைல்கள் தூரம் இருக்கும் எனவும் இந்த நட்சத்திரத்தினை மே மாத இறுதி வாரத்தில் கண்களுக்கு தெரியும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மேலும் இந்த நட்சத்திரத்தினை 5 முதல் 6 நாட்கள் வரை கண்ணாடி ஏதுமின்றி வெறும் கண்களாலேயே கண்டு மகிழலாம் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்