ஹீமோகுளோபின் அளவை கணக்கிட ஸ்மார்ட் கைப்பேசி டூலினை உருவாக்கும் ஆராய்ச்சியாளர்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

மனித இரத்தத்தினை பயன்படுத்தாமலே அவர்களின் ஹீமோகுளோவின் அளவினை கணக்கிடக்கூடிய புதிய தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒட்சிசனை கொண்டுசெல்லும் செங்குருதிச் சிறுதுணிக்கைகளிலேயே ஹீமோகுளோபின் காணப்படுகின்றது.

எனவே இதனை அளவிடுவதற்கு இரத்த மாதிரி பெறப்படுவது வழங்கமாகும்.

ஆனால் தற்போது மனிதர்களின் கண் இமையின் படத்தினைக் கொண்டு ஹீமோகுளோபினை அளவிடக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி தொழில்நுட்பத்தினையே ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள Purdue பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதற்கான டூலினை உருவாக்கி வருகின்றனர்.

மேலும் இதற்கு புகைப்படம் பயன்படுத்தப்படுவதனால் ஸ்மார்ட் கைப்பேசி தவிர்ந்த வேறெந்த வன்பொருட் பாகமும் தேவையில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்