மிகப்பெரிய அணுக்கரு இணைவுப் பரிசோதனையில் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
869Shares

சுமார் 14 வருடங்களின் பின்னர் கிடைக்கப்பெற்ற அனுமதியின் அடிப்படையில் மிகப்பெரிய அணுக்கரு பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்படுவதற்கான ஆயத்தயங்கள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய் கிழமை முதல் இவ் அணுக்கரு இணைவுப் பரிசோதனைக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப் பரிசோதனையானது மேற்கு பிரான்ஸ் பகுதியில் இடம்பெறுகின்றது.

இது சூரியனைப்போன்று மிகப்பெரிய சக்தியைப் பிறப்பிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் பூமிக்கு தேவையான பெருமளவு சக்தியை இதிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு International Thermonuclear Experimental Reactor (ITER) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இதனை வியாபார ரீதியாக மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2025 ஆண்டு டிசம்பர் மாதத்தில் வியாபார ரீதியான அறிமுகம் இடம்பெறும் என தெரிகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்