பில்லியன் வரையான டொலர்களை வருமானமாக ஈட்டித்தரும் தேனீக்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
149Shares

தேனீக்கள் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை இடம்பெறச் செய்வதன் ஊடாக வருடம்தோறும் சுமார் 1.5 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டித்தருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் கனடாவினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

வட அமெரிக்காவில் மாத்திரம் சுமார் 4,000 வகையான தேனீக்கள் இருப்பதாகவும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு இடம்பெறும் மகரந்தச் சேர்க்கையின் மூலம் கிடைக்கப்பெறும் பொருட்கள் மூலம் 131 வகையான வியாபாரப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று காட்டுத்தேனீக்கள் பல இனத் தாவரங்களில் விளைச்சலை பன்மடங்கு அதிகரிக்கக்கூடின எனவும் புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்