உலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்: எதற்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

ஆய்வுகளுக்கு மாத்திரமன்றி பொழுதுபோக்குவதற்கும் பலர் தெளிவான வானத்தை தேடி செல்வதுண்டு.

அவ்வாறு உலகிலேயே இரவு நேரத்தில் வானத்தினை மிகவும் தெளிவாக அவதானிக்கக்கூடிய இடம் ஒன்றினை விஞ்ஞானிகள் பூமியில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த இடமானது அந்தாட்டிக்கா பகுதியில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

University of British Columbia (UBC) விஞ்ஞானிகள் குழு ஒன்றே இப் பிரதேசத்தினை கண்டுபிடித்துள்ளது.

இவர்கள் பூமியிலிருந்து பார்க்கும்போது எந்த இடங்களில் நட்சத்திரங்களின் தெளிவு அதிகமாக இருக்கின்றது என்பதனை அளவிட்டுள்ளனர்.

இவ்வாறு அளவிட்டதன் அடிப்படையிலேயே அந்தாட்டிக்காவின் குறித்த பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இப் பகுதியானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 13,000 அடிகள் உயரத்தில் இருப்பதாகவும், சில சமயங்களில் இங்கு வெப்பநிலையானது -90 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்