செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கும் Tianwen-1 நிலவு, பூமியை படம் எடுத்த அனுப்பியது

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

சீனாவானது செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை தெரிந்ததே.

இதற்காக கடந்த ஜுலை மாதம் 23 ஆம் திகதி Tianwen-1 எனும் விண்வெளி ஓடத்தினை செவ்வாய் கிரகம் நோக்கிய அனுப்பியிருந்தது.

தற்போது செவ்வாய் கிரகம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் குறித்த விண்கலம் பூமி மற்றும் நிலவினை படம் எடுத்து அனுப்பியுள்ளது.

பூமியிலிருந்து சுமார் 1.2 மில்லியன் கிலோ மீற்றர்களிற்கு அப்பால் பயணிக்கும்போதே குறித்த புகைப்படங்களை எடுத்துள்ளது.

இந்த தகவலை China National Space Administration (CNSA)வெளியிட்டுள்ளது.

optical navigation sensor மூலம் குறித்த கறுப்பு வெள்ளை புகைப்படங்களை Tianwen-1 எடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை United Arab Emirates' (UAE) மற்றும் நாசா என்பனவும் செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்யும் வகையில் தமது விண்கலங்களை முறையே ஜுலை 19 ஆம் திகதி, ஜுலை 30 ஆம் திகதிகளில் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NASA/JPL

CNSA

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்