இடையூறிற்கும் மத்தியில் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

Bob Behnken மற்றும் Doug Hurley ஆகிய இரு விண்வெளி வீரர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

SpaceX திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மே மாதம் 30 ஆம் திகதி இவர்கள் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

எனினும் குறித்த தினத்தில் இவர்கள் தரையிறங்கும் இடத்தில் சூறாவளி காற்று வீசும் அபாயம் காணப்பட்டிருந்தமையினால் இருவரையும் பூமிக்கு மீள அழைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

ஆனாலும் மேலும் தாமதிக்க முடியாது என்ற நிலையில் சுமார் 27 மில்லியன் மைல் தூரங்கள் பயணம் செய்து பாதுகாப்பாக பூமிக்கு வந்துள்ளனர்.

புளோரிடாவின் பென்ஸ்கோலா எனும் பகுதிக்கு அண்மையில் உள்ள மெக்ஸிக்கோ வளைகுடாவில் இவர்கள் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்