இதுவரை கண்டறியப்படாத புதிய கனிமம் கண்டுபிடிப்பு: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
90Shares

பூமியின் மேற்பரப்பில் மாத்திரமன்றி ஆழமான பகுதிகளிலும் ஏராளாமான கனிமங்கள் காணப்படுகின்றன.

இதுவரை பல வகையான கனிமப்பபொருட்கள் கண்டறியப்பட்டுள்ள போதிலும் கண்டுபிடிக்கப்படாத கனிமங்களும் காணப்படவே செய்கின்றன.

இப்படியிருக்கையில் இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படாததும், பெயரிடப்படாததுமான கனிமம் ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இது ரஷ்யாவிலுள்ள Tolbachik எனும் எரிமலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கனிமமானது மென்பச்சை வர்ணம் உடைய பளிங்கு போன்று தோற்றமளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tolbachik எரிமலையானது முதன் முதலாக 1975–1976 ஆண்டு காலப் பகுதியில் சாம்பலை கக்கியிருந்தது.

அதன் பின்னர் இரண்டாவது தடவையாக 2012–2013 காலப் பகுதியில் கக்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த எரிமலையில் இதுவரை 130 வரையான கனிமங்கள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Filatov et al., Mineralogical Magazine, 2020

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்