செவ்வாய் கிரகம் தொடர்பில் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் உட்பட மேலும் சில ஆய்வு நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இதுவரை செயற்கைக்கோள்களும், ரோவர்களுமே செவ்வாய் கிரகத்தினை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றன.
எனினும் விண்வெளி வீரர்கள் எவரும் இதுவரை செல்லவில்லை.
இந்நிலையில் மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் SpaceX திட்டத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான எலன் மொஸ்க் செவ்வாய் கிரகத்தில் எப்போது மக்கள் காலடி பதிப்பார்கள் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி அடுத்த 6 வருடங்களுக்குள் மக்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வார்கள் என தனக்கு ஓரளவு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.