காபனீரொட்சைட்டினை ஜெட் விமான எரிபொருளாக பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் அசத்தல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
249Shares

உலக அளவில் வளிமண்டலத்தில் வெகுவாக அதிகரித்து வரும் காபனீரொட்சைட்டு உயிரினங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றது.

இவ் அதிகரிப்பைக் குறைப்பதற்கு விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவற்றில் காபனீரொட்சைட் வாயுவினை பிறிதொரு வடிவத்திற்கு மாற்றுவதையும் பரீட்சித்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் காபனீரொட்சைட்டினை ஜெட் விமானங்களின் எரிபொருளாக மாற்ற முடியும் என தற்போது கண்டறிந்துள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Organic Combustion Method (OCM) to reverse the natural process of burning fossil fuel அல்லது இயற்கை வாயு எனும் பொறிமுறையினை இதற்கு பயன்படுத்துகின்றனர்.

அதாவது படிமங்களில் இருக்கும் ஹைட்ரோ காபன்கள் எரிவடைந்து காபனீரொட்சைட்டினை உருவாக்குகின்றன.

இதன்போது சக்தியை அவை வெளிவிடுகின்றன.

இதில் OCM பொறிமுறையினைப் பயன்படுத்தி மேற்கண்ட செயற்பாட்டினை பின்னோக்க மேற்கொள்ள முடியும் என அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவது காபனீரொட்சைட் வாயுவினை திரவ எரிபொருளாக மாற்ற முடியும்.

இவ்வாறு மாற்றப்பட்ட எரிபொருளை ஜெட் விமானங்களில் பயன்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்