அடுத்த மாதம் பூமியைக் கடக்கவுள்ள பெரிய விண்கல்: ஆபத்தானதா?

Report Print Balamanuvelan in விஞ்ஞானம்
0Shares

ஒரு மைல் அகலமுள்ள, அதாவது உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவை விட இரு மடங்கு பெரியதான ஒரு விண்கல் அடுத்த மாதம் பூமிக்கருகில் கடந்து செல்ல இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

அந்த விண்கல் பயங்கர ஆபத்தானது என நாசாவால் குறிபிடப்பட்டுள்ளது.

ஆனால், 231937 (2001 FO32) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கல், பூமியிலிருந்து 1.2 மில்லியன் மைல்கள் தொலைவில் பயணிக்க இருப்பதால், அது பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

என்றாலும், நாசாவைப் பொருத்தவரை, பூமியிலிருந்து 93 மில்லியன் மைலுக்குள் வரும் எந்த விண்கல்லுமே பூமிக்கு அருகானது, அபாயமானது என்றே கருதப்படும்.

இதுவரை பல விண்கற்கள் பூமியை நெருங்கி வந்திருக்கின்றன என்றாலும், இந்த விண்கல்தான் அவற்றில் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் (மார்ச்) அந்த விண்கல் பூமிக்கு அருகில் கடந்து செல்லும்போது, பொருத்தமான ஒரு தொலைநோக்கி இருந்தால் நீங்களும் அந்த விண்கல்லை பார்க்கலாமாம்!

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்