முருகன் ஆலயத்தில் காவடிஆடிய படையினர்

Report Print Mohan Mohan in பாதுகாப்பு

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலயத்தில் இன்று இராணுவத்தினர் காவடி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இம்மாதம் 23 ஆம் திகதி ஆடிச்செவ்வாய் அன்று 129 விஷேட தேவையுடைய படை வீரர்களது பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட கதிர்காம யாத்திரையானது இன்று கதிர்காமம் முருகன் ஆலயத்தில் காவடி நடனங்களும் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தனின் காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்ததைக் குறிக்கு முகமாகவும் கதிர்காமக் கந்தன் ஆலயம் நீண்ட வரலாற்றைக் கொண்டது.

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் முருகன் ஆலயத்தில் இன்று இராணுவத்தினர் காவடி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாதுகாப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்