காஷ்மீரில் தாக்குதலில் 8 வீரர்கள் பலி

Report Print Thayalan Thayalan in பாதுகாப்பு
காஷ்மீரில் தாக்குதலில் 8 வீரர்கள் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் வாகனம் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக நடந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் கூடுதலாக 2 தீவிரவாதிகள் பதுங்கி இருக்க கூடும் என நம்பப்படுகிறது. அதனால் அவர்களை கண்டறிய தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சிக்கு பின் 6 வாகனங்களில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில் ஸ்ரீநகரின் நெடுஞ்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 5 பேர் பலியானது உறுதியாகியுள்ள நிலையில், 4 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இந்த மாதத்தில் இது 4வது தாக்குதல். இதற்கு முன்பு நடந்த 3 தாக்குதல்களில் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினை சேர்ந்த 5 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

கடந்த வருடத்தினை விட இந்த வருடம் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன. கடந்த 5 மாதங்களில் 50 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். கடந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் ஒருவரும் ஊடுருவவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாதுகாப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments