இதுதான் உண்மையான நட்பு: தோழிக்காக தனது உயிரை பலிகொடுத்த வாலிபர்

Report Print Fathima Fathima in தெற்காசியா
இதுதான் உண்மையான நட்பு: தோழிக்காக தனது உயிரை பலிகொடுத்த வாலிபர்

வங்கதேச தலைநகர் டாக்கடாவில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்குள் புகுந்த தீவிரவாதிகள் நடந்த கொடூர தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களில் இந்தியாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் தரிஷி ஜெயின் என்பவரும் பலியானார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லி பல்கலைகழகத்தில் படித்து வந்த தரிஷி, விடுமுறைக்காக தனது தந்தையை பார்க்க வங்கதேசம் வந்துள்ளார்.

ஹொட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, தரிஷி ஜெயின் அவரது அமெரிக்க தோழி அபிந்தா கபீர்(19) மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த பராஸ் அயாஸ் ஹொசைன்(20) ஆகியோருடன் கழிவறையில் ஒளிந்திருந்தார்.

இவர்களை கண்டுபிடித்த தீவிரவாதிகள், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என விசாரித்துள்ளனர், ஹொசைன் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை மட்டும் உயிருடன் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

ஆனால் இரண்டு தோழிகளையும் விட்டுவிட்டு ஹொசைன் செல்ல மறுத்ததால், தீவிரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments