இந்திய தேசிய கொடியை எரித்து பாகிஸ்தானில் போராட்டம்

Report Print Basu in தெற்காசியா

சார்க் மாநட்டில் கலந்து கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் வருகையை கண்டித்து, அந்நாட்டு அரசியல் கட்சிகள் சில இணைந்து பல இடங்களில் கண்டன போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, இஸ்லாமாபாத்தில் நடந்த போராட்டத்தில் போராட்டகாரர்கள் இந்திய தேசிய கொடியின் மீது காலணிகளுடன் ஏறி நின்று இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அலுவலகம் முன் இந்திய தேசிய கொடி மற்றும் ராஜ்நாத் சிங்கின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கராச்சியில் சமீபத்தில் கொல்லப்பட்ட புர்கான் வானியின் புகைப்படத்தை ஏந்தியவாறு பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் சார்க் மாநட்டில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது, தீவிரவாதிகளில் நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் கிடையாது, தீவிரவாதிகளை தியாகிகளாக சித்தரித்து புகழ்பாடுதல் கூடாது என பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments