விமான நிலைய பெண் ஊழியர்கள் கொடூரமாக சுட்டுக்கொலை! மர்மநபர்கள் வெறிச்செயல்

Report Print Jubilee Jubilee in தெற்காசியா

ஆப்கானிஸ்தானில் விமான நிலைய பெண் ஊழியர்கள் 5 பேர் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார் நகர விமான நிலையத்தில் பணியாற்றி வந்த 5 பெண் ஊழியர்கள் நேற்று வழக்கம் போல் ஒரு மினி வேனில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் வேனை வழிமறித்து சரிமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் வேனில் இருந்த 5 பெண் ஊழியர்களும், வேனை ஓட்டி வந்த டிரைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து காந்தஹார் விமான நிலையத்தின் இயக்குனர் அகமதுல்லா பைஸி கூறுகையில், வேலை பார்க்கிற பெண்களுக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. பெண்கள் வேலை பார்ப்பதை விரும்பாத கும்பல் தான் இந்த செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

இருப்பினும் பெண்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வரும் தலீபான் அமைப்பினர் தான் இதையும் செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments