நள்ளிரவில் வாட்ச்மேனை தாக்கிய சகோதரிகள்: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது

Report Print Aravinth in தெற்காசியா

இந்தியாவின் ஹைதராபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்த வாட்சுமேனை சகோதரிகள் இருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ஹைதராபாத் குக்கட்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புஜ்ஜையா(50). இவர் அப்பகுதி ராமகிருஷ்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாட்சுமேனாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சரியாக 2.30 மணியளவில் குடியிருப்பில் இருந்து ஏதோ சபதம் கேட்டது என சோதனைக்கு சென்றுள்ளார்.

அப்போது, மாடியின் 3 வது தளத்தில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் வீட்டிற்கு முன் மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவர் நின்று சத்தமாக பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அவர்களை தூங்குமாறு எச்சரித்து விட்டு மாடியில் ஏற முற்பட்டுள்ளார்.

அப்போது, அந்த சகோதரிகளில் ஒருவர் வாட்ச்மேனை கத்தியால் சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளார்.

இதனால், படுகாயமடைந்த வாட்ச்மேனை அக்குடியிருப்பு மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ உள்ளூர் கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இதனால், இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் பதியப்பட்டது. இருந்த போதிலும், தாக்குதலில் ஈடுபட்ட பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் இன்னும் பொலிசார் கைது செய்யாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments