காட்டுத் தீ போல் பற்றி எரிந்த காரில் பையை எடுக்க முற்பட்ட பெண்.. என்ன ஆனார்? அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in தெற்காசியா
287Shares
287Shares
ibctamil.com

சீனாவில் எரிந்து கொண்டிருந்த காரில் தன்னுடைய விலை உயரந்த டிசைனர் பையை எடுப்பதற்கு இளம் பெண் ஒருவர் அந்த காரின் உள்ளே செல்ல முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Daqing என்ற நகரத்தில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய BMW 5 ரக காரை நிறுத்திச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று காரின் பெட்ரோல் டேங்கில் இருந்து தீப்பற்றியுள்ளது.

அதைத் தொடர்ந்து கார் முழுவதும் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பெண் திடீரென்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த காரில் தன்னுடைய விலையுர்ந்த டிசைனர் பையை எடுப்பதற்காக காரின் கதவை திறந்து உள்ளே செல்ல முற்படுகிறார்.

கார் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால வெடிப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த பெண்ணோ தன் உயிர் மீது சற்றும் பயம் இல்லாமல் மீண்டும் மீண்டும் கதவை திறந்து தன்னுடைய பையை எடுக்க முற்படுகிறார்.

அதன் பின்னர் அங்கிருந்த நபர் ஒருவர் அப்பெண்ணை தடுத்து காரின் அருகே செல்ல விடாமல் தடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது அந்நாட்டு ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் அப்பெண் தீயில் ஏற்பட்ட சிறு காயங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் மது குடித்திருந்து வாகனத்தை ஓட்டி வந்திருந்தால் அவரின் ஓட்டுநர் உரிமத்தை இழக்க நேரிடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

காரணம் சாதரண நிலையில் இருக்கும் மனிதன் இது போன்று தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது உள்ளே செல்ல முற்படமாட்டார். அதன் காரணமாகவே இது போன்ற சந்தேகம் எழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments