தமிழக வரலாற்றில் ஏப்ரல் மறக்க முடியாத மாதம்: ஏன் தெரியுமா?

Report Print Peterson Peterson in தெற்காசியா
126Shares
126Shares
ibctamil.com

இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது தற்போதைய தமிழக தலைநகரமான சென்னையில் மோசமான தாக்குதலை நடத்த ஜப்பான் திட்டமிட்டது வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகும்.

ஜேர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரால் தொடங்கிய இரண்டாம் உலகப்போரால் பல நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்தன.

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆப்பிரிக்க மாற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ராணுவத்தை அனுப்பி நிலை நிறுத்தியது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த ஜப்பான் இந்தியாவின் எல்லை நகரங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது.

பர்மா, ரங்கூன், பாம்பே(மும்பை), மெட்ராஸ்(சென்னை) உள்ளிட்ட நகரங்கள் ஜப்பான் நாட்டின் இலக்குகளாக இருந்துள்ளன.

1942-ம் ஆண்டில் ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றப்போது மெட்ராஸ் நகருக்கு மார்ச் மாதம் முதல் தாக்குதல் அச்சுறுத்தல் ஜப்பான் ராணுவம் மூலம் ஏற்பட்டது.

ஏப்ரல் 3-ம் திகதி முதல் இந்த அச்சுறுத்தல் அதிகமானது. இறுதியாக, ஏப்ரல் 12-ம் திகதி மெட்ராஸ் அரசு குடிமக்களுக்கு ஒரு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.

அதில், ‘குடிமக்கள் அனைவரும் மெட்ராஸ் நகரை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்கில் பதுங்குங்கள்’ என அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்தில் மெட்ராஸில் குடியிருந்த சுமார் 3 லட்சம் மக்கள் நகரை விட்டு வெளியேறினார்கள்.

இதனை தொடர்ந்து அடுத்த 7 நாட்களில் 5 லட்சம் மக்கள் வெளியேறினார்கள். ஆனால், ஏப்ரல் 23-ம் திகதிக்கு பின்னர் மெட்ராஸ் நகருக்கு இருந்து அச்சுறுத்தல் சிறிது சிறிதாக நீங்கியது.

ஏனெனில், மெட்ராஸ் கடற்பகுதி வழியாக செல்ல இருந்த ஜப்பான் நாட்டின் போர்க்கப்பல் அமெரிக்க ராணுவத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

இதனால் மெட்ராஸ் நகருக்கு ஏற்பட்ட மிக மோசமான தாக்குதல் அச்சுறுத்தல் நீங்கியது.

ஏப்ரல் முதல் மற்றும் இரண்டாது வாரங்களை மெட்ராஸ்(சென்னை) நகருக்கு ஜப்பான் நாட்டால் ஏற்பட்ட அச்சுறுத்தலின் 75-வது ஆண்டாக தற்போது அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments