நடுவானில் கோளாறு: தரையில் மோதி வெடித்து சிதறிய ஜெட் விமானம்

Report Print Basu in தெற்காசியா
145Shares
145Shares
ibctamil.com

பாகிஸ்தானில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தரையில் மோதி வெடித்து சிதறியுள்ளது.

Mianwali, Sabzazar பகுதியிலேயே விமானம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், ஜெட் விமானத்தின் விமானி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து பாகிஸ்தான் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கமாண்டர் மொஹம்மத் ஷாஜாத் F-7 ஜெட் விமானத்தை இயக்கிக்கொண்டிருந்த போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

விபத்தின் போது விமானத்தை விட்டு வெளியேறாத விமானி மொஹம்மத் ஷாஜாத் உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து தகவலறிந்த அதிகாரிகள், சம்பவயிடத்திலிருந்து விமானியின் உடலை மீட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

விபத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாவது, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே காட்டு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளார்.

எனினும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்