மாதவிடாய் நேரத்தில் தனியாக தங்கவைக்கப்பட்ட பெண் மரணம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

நேபாள் நாட்டில் மாதவிடாய் சமயத்தின்போது தனிக்குடிசையில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள் நாட்டில் உள்ள அதிகமான கிராமப்புறங்களில், மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு என்று தனிக்குடிசை அமைக்கப்பட்டு அதில்தான் அவர்கள் தங்க வேண்டும்.

வீடுகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த குடிசை முறை பின்பற்றப்பட்டு வருகிறது, இதனால் பெண்கள் பல்வேறு தீங்குகளுக்கு ஆளாகிறார்கள். Gauri Bayak(23) என்ற பெண் மாதவிடாயின் போது குடிசையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இரவு நேரத்தில், வெளிச்சம் வேண்டும் என்பதற்காக குடிசையின் ஒருபக்கத்தில் தீ மூட்டிவைத்துள்ளார். இதில், அதிலிருந்து வெளியான புகையால் மூச்சு அடக்கி குடிசையில் வைத்தே உயிரிழந்துள்ளார்.

இதுபோன்று குடிசைகளில் பெண்களை தங்கவைத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 3 மாதங்கள் சிறைதண்டனை அல்லது 3,000 அபராதம் விதிக்கப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்த போதிலும், கிராமப்புற மக்களிடையே இந்த மூடப்பழக்க வழக்கம் மாறவில்லை.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்