அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு என்னால் பேசமுடியவில்லை! கொடூர மனதை காட்டும் சம்பவம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா
231Shares
231Shares
ibctamil.com

ஆந்திராவில் சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்த நாய்மீது தார் ஊற்றி சாலை போட்டுள்ளது மனிதனின் கொடூர மனதை காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாய்மீது தார் ஊற்றி சாலை அமைத்தது போன்ற புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட, ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நரேஷ் பரேஷ் கூறுகையில், தாஜ்மகாலில் இருந்து சர்க்கியூட் ஹவுஸ் வரை புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும்போது, தெருநாய் ஒன்று படுத்து உறங்கிக்கொண்டிருக்க, அதை விரட்டிவிட்டு சாலை அமைக்காமல் உறங்கிக்கொண்டிருந்த அதன் மீதே தாரை ஊற்றியுள்ளனர்.

அதன்பிறகு, ரோடு ரோலரையும் அதன்மீது ஏற்றியுள்ளனர். நாய் அதே இடத்தில் இறந்துவிட்டது. பின்னர், நாயின் உடலை எங்கேயோ எடுத்து சென்று எறிந்துவிட்டனர். மனிதாபிமானமே இல்லாமல் இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளனர்.

மனிதனின் கொடூர மனதை இது காட்டுகிறது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு என்னால் பேசவே முடியவில்லை என கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனம் வலுத்துவருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்