கடித்து குதறப்பட்ட லட்சக்கணக்கான பணம்! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

அசாமில் ஏடிஎம் மெஷினுக்குள் புகுந்த எலி 12 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கடித்து குதறியதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள லாய்புலி பகுதியை சேர்ந்த எஸ்பிஐ வங்கி ஏடிஎம்., கடந்த ஒரு மாதமாக வேலை செய்யவில்லை.

இதனை சரிசெய்வதற்காக, ஆட்களை அனுப்பியது வங்கி நிர்வாகம். ஏடிஎம் ,-ஐ திறந்து பார்த்த ஊழியர்களுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஏடிஎம்க்குள் புகுந்த எலி ஒன்று, மெஷினில் நிரப்பப்பட்டிருந்த 2000, 500 ரூபாய் நோட்டுகளை சிறு சிறு துண்டுகளாக கடித்து துவம்சம் செய்திருந்தது.

12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேதமாகியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டின்சுகியா பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers