சூப்பர் ஸ்டாரின் வீட்டை பார்க்க சென்ற வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

இத்தாலி நாட்டில் இருந்து மும்பைக்கு சுற்றுலா வந்த 37 வயது பெண்மணியிடம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் வீட்டை காட்டுவதாக கூறி அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்தநபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Juhu பகுதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலி நாட்டை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் சுற்றுலா வந்துள்ளார்.

சுற்றுலா Guide இல்லாமல் அதுவரை இருந்து வந்த இப்பெண், கடந்த மாதம் 14 ஆம் திகதி பேருந்தில் பயணம் செய்தபோது நபர் ஒருவருடன் அறிமுகமாகியுள்ளார்.

தன்னை ஒரு சுற்றுலா Guide என அறிமுகப்படுத்திக்கொண்டார். மேலும் மும்பை முழுவதையும் சுற்றிக்காட்டுவதாக கூறியுள்ளார், அதுமட்டுமின்றி பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் வீட்டை காட்டுகிறேன், அங்கு சென்றால் அவரை பார்க்கலாம் என டாக்ஸி வரவழைத்து அதில் அழைத்து சென்றுள்ளார்.

அமிதாப்பச்சனின் வீட்டை காட்டிய பிறகு, அந்த பெண் தங்கியிருந்த ஹொட்டலில் இறக்கிவிடுவதாக கூறி அழைத்துசென்றுள்ளார்.

இடையில் காரை நிறுத்தில் ஆல்கஹால் வாங்கிய இவர், அதனை தானும் குடித்துவிட்டு, அப்பெண்ணையும் குடிக்குமாறு வற்புறுத்தி காருக்குள் வைத்தே பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், மேலும் இத்தாலி தூதரகத்தை தொடர்பு கொண்டும் தனக்கு நேர்ந்தவை குறித்து விளக்கியுள்ளார்.

தூதரகத்தின் உத்தரவின்பேரில் பொலிசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers