மனைவியை ஏமாற்றிய வெளிநாடு வாழ் கணவர்களின் பாஸ்போர்ட் ரத்து

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

மனைவியைக் கைவிட்டு ஏமாற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சொத்துகளும் முடக்கப்படும் என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் எச்சரித்துள்ளது.

வெளிநாடு வாழ் கணவன்மார்களால் கைவிடப்பட்டுள்ளதாக கடந்த 2 மாதங்களில் 70 புகார்கள் வந்துள்ளதாக மகளிர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், சுமார் 8 வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சமந்தபட்டவர்களுக்கு நோட்டீஸ்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்திய பெண்களை மணந்து கொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களை பதிவு செய்ய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஒரு புதிய இணையதளத்தையும் உருவாக்கியுள்ளது.

திருமணங்கள் 7 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்