மனைவியின் ஒழுக்கமற்ற வீடியோவை பார்த்து வெளிநாட்டில் வாழும் கணவன் எடுத்த சோக முடிவு

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

வெளிநாட்டில் வசித்து வந்த கணவர் தனது மனைவியின் ஒழுக்கமற்ற வீடியோவை பார்த்து வேதனையடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் கலசிங்கா கிராமத்தை சேர்ந்தவர் குல்விந்தர் சிங் (35) என்பவர் ஜோர்டான் நாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

இவரது மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரிந்து கொண்ட 4 பேர் கொண்ட கும்பல் அதனை வீடியோவாக எடுத்து அவரை மிரட்டி வந்து உள்ளது. உனது கணவனுக்கு அனுப்பி வைத்து விடுவதாக கூறி உள்ளனர்.

இதுகுறித்து குல்விந்தரின் மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து அந்த கும்பல் குல்விந்தர் சிங்குக்கு வீடியோவை அனுப்பி வைத்தனர்.

அந்த வீடியோவை பார்த்து கோபம் அடைந்த கணவன் உடனடியாக ஜோர்டான் நாட்டில் இருந்து திரும்பியுள்ளார். வீட்டில் குல்விந்தர் சிங் மற்றும் குழந்தைகள் சோனல் (8) அபி (5) ஆகியோர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டனர்.

காப்பாற்ற சென்ற குல்விந்தர் சிங் மனைவி 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers