வெளிநாட்டில் இருந்து வந்தபோது மனைவியின் கழுத்தில் தாலியில்லை: கொலை குறித்து கணவனின் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா
1623Shares
1623Shares
lankasrimarket.com

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தேவானந்தம் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்து காதல் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தேவானந்தம் (வயது 35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வாள்வச்சகோஷ்டம் பகுதியை சேர்ந்த ரத்தினமணி மகள் ஷைலா (31) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுனித் (8) என்ற மகனும், அடோனா (3) என்ற மகளும் உள்ளனர்.

வெளிநாட்டில் தான் வேலைபார்த்து சம்பாதித்த பணத்தை தனது மனைவிக்கு அனுப்பிவிடுவார் தேவானந்தம். இந்நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த தேவானந்தம், தான் அனுப்பிய பணத்திற்கான விவரங்களை கேட்டுள்ளார்.

அதற்கு ஷைலா சரியான பதிலை சொல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஷைலா கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

பிறகு, சமாதானம் ஆகி வீட்டுக்கு வந்த ஷைலாவிடம் , தேவானந்த் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கோபம் கொண்டு, கழுத்தை நெறித்தும் தலையணை வைத்து அமுக்கியும் கொலை செய்துள்ளார்.

மனைவியை கொன்றதை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து விட்டு வெளியேறினார். இதற்கிடையே பொலிசார் தேடுவதை அறிந்த பக்ளி தேவானந்தம் நேற்று மதியம் தக்கலை பொலிசில் சரணடைந்தார். இதனையடுத்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கணவன் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஊருக்கு வந்தபோது என்னுடைய மனைவியின் கழுத்தில் தாலி செயின் இல்லை. அது எங்கே என்று கேட்ேடன். குழந்தைகளின் படிப்பு செலவுக்காக நகைகளை அடகு வைத்து விட்டேன். மேலும் குடும்ப செலவுக்கு கடன் வாங்கி உள்ளதாகவும் கூறினாள். மாதந்தோறும் நான் அனுப்பும் பணம் எங்கே என கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

நான் பணம் எதுவும் அனுப்பவில்லை என என்னிடம் பொய் கூறினாள், இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இதில் கோபம் கொண்டு, கழுத்தை நெறித்தும் தலையணை வைத்து அமுக்கியும் கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்