சித்தியின் தவறான உறவு....கண்டித்த அக்காவின் மகன்: பழிக்குப்பழியாக அடுத்தடுத்து நடந்த கொலைகள்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

ராஜபாளையம் மாவட்டத்தில் வழிதவறிய வாழ்க்கையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் கொலை செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் உறவினர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சரோஜா என்பவரின் மகன் கடற்கரைப்பாண்டி அந்த ஏரியாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தான். சரோஜாவின் தங்கையும், கடற்கரைப்பாண்டியின் சித்தியுமான பிரியா அந்தப் பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்தாள்.

சித்தி பிரியாவின் தகாத நடவடிக்கையைக் கண்டித்த கடற்கரைப்பாண்டி, தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தான். இந்தநிலையில், கடந்த 16-ஆம் தேதி பிரியா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தற்காலை என்று கருதிய குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.

இந்நிலையில், குடிபோதையில் தனது சித்தியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக கடற்கரைப்பாண்டி உளறியுள்ளான். இதனைகேட்டு கோபமடைந்த இறந்துபோன பிரியாவின் மகள் வின்சிலா, சரோஜாவிடம் சென்று, எனது அம்மாவை கொலை செய்த உனது மகனை கொன்றுவிடு என மிரட்டியுள்ளார்.

ஆனால், பெற்ற மகன் என்பதல் சரோஜா மறுத்துள்ளார். இதனால் வின்சிலாவுக்கு கோபம் அதிகமாகியுள்ளது, ன் தாய் மாமா செல்வத்தின் உதவியுடன் கடற்கரைப் பாண்டியைக் கொலை செய்வதற்கு ஆயத்தமானாள்.

இந்தத் திட்டத்துக்கு, பாட்டி கனகமணி, பெரியம்மா செல்வி, சித்தி ஆஞ்சலா சகாயராணியும் உடன்பட்டிருக்கின்றனர்.

இறந்த பிரியாவுக்கு 30-ஆம் நாள் விசேஷம் வைத்தனர். கடற்கரைப்பாண்டியும் வந்து கலந்துகொண்டான். அன்றிரவு, சரோஜாவுடன் மற்ற பெண்களும், பாட்டி கனகமணியின் வீட்டுக்கு தூங்கச் சென்றனர்.

இந்த நேரத்தில், செல்வமும் மாரியப்பனும் கடற்கரைப்பாண்டியைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, வின்சிலாவின் டூ வீலரில் பிணத்தை எடுத்துச்சென்று, பக்கத்தில் உள்ள புதிய தாதிக்கண்மாயில் வீசிவிட்டு திரும்பினர்.

தனது மகன் கண்மாயில் சடலமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சரோஜா, இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி திட்டம் தீட்டுதல், சதித்திட்டம் தீட்டிக் கொலை செய்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ், கொலையான கடற்கரைப்பாண்டியின் பாட்டி கனகமணி, பெரியம்மா செல்வி, சித்தி ஆஞ்சலா சகாயராணி, அக்கா வின்சிலா, தாய்மாமன் செல்வம் மற்றும் பெரியம்மாவின் கள்ளக்காதலன் மாரியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்