ஆண்மை இழந்த கணவர்.. மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற திடுக்கிடும் சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா

தமிழ்நாட்டின் திருவள்ளூரில் பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பரமசிவம் என்பவருக்கு 45 வயதாகியும் திருமணம் ஆகாத நிலையில், காந்திமதி என்ற 41 வயதான பள்ளி ஆசிரியையை குடும்பத்தார் திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையானதால் பரமசிவம் ஆண்மை தன்மை இழந்தவர் என்பது தெரியவந்ததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

மேலும், மனைவியின் நடத்தையில் பரமசிவத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2013-ல் காந்திமதியை கொல்ல முடிவெடுத்த பரமசிவன் அவரை அடிக்க, காந்திமதி மயங்கியுள்ளார்.

பின்னர் கழுத்தை காலால் மிதித்து கொன்றுள்ளார் பரமசிவம்.

இதையடுத்து பெட்ரோல் வாங்கி வந்து சடலத்தை எரித்துள்ளார். புகையால் மாட்டிகொள்வோம் என பயந்து தீயை அணைத்துவிட்டு பிலேடால் காந்திமதியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்துள்ளார் பரமசிவம்.

தலையை சென்னை யானைகவுணி காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயிலும், கைகள் மற்றும் உடலின் இடுப்புக்கு மேல் பகுதியை துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி அருகில் உள்ள புதர்பகுதியிலும் வீசி உள்ளார்.

மீதம் உள்ள பகுதிகள் குளியலறையில் இருந்ததால் துர்நாற்றம் வெளியில் வீச தொடங்கியதால் வீட்டு உரிமையாளர் சந்தேகபட்டு பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் பரமசிவம் சிக்கினார்.

கைது செய்யப்பட்ட அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது ஆயுள் தண்டனையும், கொலையை மறைக்க முயன்ற குற்றத்திற்காக கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்