தல போல வலம் வந்த இளைஞர்: ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

சினிமாவில் வருவது போல நிஜவாழ்க்கையிலும் ரவுடியாக சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் தலை வெட்டி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவை பார்த்து நிஜத்தில் ரவுடியானவர் இந்தியாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த பாஸ்கர் என்பவர்.

பாஸ்கர் மீது இரண்டு கொலை வழக்கு, பொலிஸ் ஏட்டுவை கொலை செய்ய முயன்ற வழக்கு, வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அந்த பகுதியில் உள்ள கூலிப்படையினர் இவரை தல என்று அழைக்க அதன் பின்னர் முழு நேர ரவுடியாக வலந்தார் பாஸ்கர்.

இந்த நிலையில் தான் திங்கட்கிழமை 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார் பாஸ்கர் என்கின்றனர் காவல்துறையினர்.

இந்த கொலை பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பது குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர் சில சிசிடிவி காட்சிகள் மூலமாக கொலையாளிகளை அடையாளம் கண்டுள்ளனர்.

3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் தான் பாஸ்கரை தீர்த்து கட்டியுள்ளது. அவர்களில் 3 பேர் தங்கள் முகம் தெரிந்து விடக்கூடாது என்று ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த அய்யம்பெருமாள் என்பவரையும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரையும் திண்டுக்கல் மெயின் ரோட்டில் ஓட விட்டு வெட்டிக் கொன்ற சம்பவத்தில் ஈடுபட்டதால் சாதாரண பாஸ்கர் ரவுடி பாஸ்கரானதாக தெரிவிக்கின்றனர் காவல்துறையினர்.

இச்சம்பவங்களால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பழிக்கு பழியாக பாஸ்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கொலையாளிகள் அவரது தலையை குறிவைத்து வெட்டி பிளந்திருப்பதே இதற்கு சாட்சி என்கின்றனர்.

மட்டுமின்றி தன்னை சிலர் பின் தொடர்வதை தெரிந்து கொண்ட பாஸ்கர் சில மாதங்கள் சென்னையில் தங்கி இருந்ததாகவும் அங்கிருந்து திரும்பிய 2 வது நாள் திட்டமிட்டு வெட்டி கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கொலையாளிகள் பயன்படுத்திய பல்சர் மோட்டார் சைக்கிளின் முகப்பில் அஜீத் படத்துடன் ஒருவர் இருப்பது போன்ற கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் காணப்படுவதால் அவர் தான் கொலையாளியா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்