ரூ.40ஆல் வந்த பிரச்சனை: நபரை கொன்று புதைத்த உயிர் நண்பர்கள்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவின் ஒடிசாவில் சீட்டு விளையாடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் நபரை மூன்று நண்பர்கள் சேர்ந்து கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமா ஷுஜோய் என்பவர் கடந்த 17-ஆம் திகதி வீட்டை விட்டு மார்க்கெட்டுக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து சமாவின் குடும்பத்தார் பொலிசில் புகார் கொடுத்த நிலையில் பொலிசார் விசாரித்து வந்தனர்.

சமா குறித்து அவருக்கு தெரிந்த நபர்கள் பலரிடம் விசாரித்து வந்த சூழலில் அவரின் நண்பரான சுரேந்திராவிடம் விசாரித்த போது பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து சுரேந்தரிடம் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் சமாவை தனது நண்பர்கள் சூர்யகாந்த், நிதியா ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ததாக அவர் கூறினார்.

சுரேந்திராவின் வாக்குமூலத்தில், நாங்கள் நான்கு பேரும் காட்டுப்பகுதியில் சீட்டாட்டம் விளையாடினோம், அப்போது அதில் சமா ரூ. 40 ஜெயித்தார். அந்த பணத்தை திரும்ப கேட்டதற்கு அவர் தரவில்லை.

இதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டதில் நானும், சூர்யகாந்த் மற்றும் நிதியாவும் சேர்ந்து சமாவை கொலை செய்துவிட்டு அங்கேயே புதைத்துவிட்டோம் என கூறியுள்ளார்.

இதையடுத்து சமாவின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சுரேந்திராவை கைது செய்துள்ள நிலையில் மற்ற இருவரை தேடி வருகிறார்கள்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்