பெற்ற மகளின் உயிரை காப்பாற்ற முன்வராத பெற்றோர்: மாமியார் செய்த மனதை உருக்கும் செயல்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் பெண்ணுக்கு சிறுநீரகம் தர அவரின் பெற்றோர் மறுத்த நிலையில் மாமியார் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மெர் நகரை சேர்ந்தவர் சோனிகா (32). திருமணமான இவர் தனது கணவர் மற்றும் மாமியார் கனிதேவி (60) உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சோனிகாவின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது.

இதையடுத்து டயாலிஸில் செய்த வந்த அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

சோனிகாவுக்கு அவரின் தாய் பன்வாரி தேவி, தந்தை மற்றும் சகோதரரின் சிறுநீரகம் பொருந்திய நிலையிலும் அவர்கள் யாரும் கொடுக்க முன்வரவில்லை.

இதையடுத்து சோனிகாவின் மாமியார் கனிதேவி தனது சிறுநீரகத்தை மருமகளுக்கு கொடுக்க முன்வந்தார்.

இதையடுத்து சோனிகாவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

என் மாமியாருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன், அவர் எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் சோனிகா.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers